×

தக்காளி பதுக்கலை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை.: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தக்காளியின் விலை உயர்ந்து இருப்பதால் பதுக்கலை தடுக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி, வெங்காயம் உள்பட அத்தியாவசிய பெருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விலையை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திரா, வரத்து வரக்கூடிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் விலை உயர்ந்து இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த சூழலை பதுக்கலில் ஈடுபட்டு மேலும் விலை உயர்வைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தவும், ஆய்வுகளை அதிகரிக்கவும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், சந்தைக்கு அருகே உள்ள பகுதியிலேயே காய்கறி உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியான காய்கறிகளை சந்தைக்கு கொண்டுவர வாகன ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். 


Tags : Minister ,M. R. Q. Biennirschelvam , Advice to the authorities to monitor the hoarding of tomatoes: Minister MRK Panneerselvam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...