இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது..!!

இஸ்ரேல்: இஸ்ரேலில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா கொல்லுயிரியானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் நாடு இஸ்ரேல். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவித்த நாடும் இஸ்ரேல் ஆகும். ஆனால் அங்கு கோடை காலத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியது.

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கூட கொரோனாவால் தாக்கப்பட்டனர். அதிலும் அண்மை காலமாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம். இந்நிலையில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். இந்தியாவிலும், குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 2022 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: