×

தலைமை செயலகத்தில் நடந்த 'வருங்கால தகவல் தொழில்நுட்பம்'குறித்த ஆலோசனை குழுவின் முதல் கூட்டம்

சென்னை: தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையானது, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனங்கள் மற்றும் சேவைகளின் கொள்முதல் மின்னாளுகை மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழ்கிறது.

தமிழக அரசு, மாநில தலைமைக்கு, கொள்கை சார் முடிவுகளை எடுக்கவும், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டுடன் புது யுக்தியை மேம்படுத்தவும், அறிவுரை வழங்கும் வகையில் வருங்கால தகவல் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில் நுட்பங்களுக்கான ஆலோசனை குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த குழுவானது தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு, தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகளுக்கு வழிகாட்டுதல், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக கருத்துகளை வழங்குதல், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல், சுதந்திரமான ஆலோசனைகளை வழங்கும் சிந்தனை குழுவாக செயல்படுதல், இத்துறையின் பொது நிலைப்பாட்டை மேம்படுத்துதல், துறையின் திறன்சார்ந்த முயற்சிகளை வடிவமைக்க உதவுதல் ஆகிய வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலமாக 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கினை அடைய வழிவகுக்கும். இக்குழுவின் பரிந்துரைகள் ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பப்படும்.

இந்த, “வருங்கால தகவல் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப ஆலோசனை குழு”-வின் முதல் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்களின் தலைமையில் 22.11.2021 அன்று கீழ்காணும் குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது:

i. முனைவர் நீரஜ் மிட்டல், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை
ii. திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT)
iii. திரு. N. G. சுப்பிரமணியம், தலைமை செயல் அலுவலர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
iv. திரு. கிரிஷ் கோபால கிருஷ்ணன், இணை நிறுவனர், முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இன்போசிஸ் டெக்னாலஜிஸ்
v. திரு. பாஸ்கர் ராமமூர்த்தி, இயக்குநர், IIT, சென்னை
vi. திரு. மாதவன் நம்பியார், இ.ஆ.ப., (ஓய்வு), முன்னாள் செயலாளர், உள்ளாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசு, செயலாளர் தகவல் தொழில்நுட்பத் துறை, இந்திய அரசு, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம்
vii. திரு. டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு), முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை ஆலோசகர்
viii. முனைவர் சந்தியா சிந்தாலா, நாஸ்காம் திறன் குழு
ix. திரு. முருகவேல் ஜானகிராமன், தலைமை நிர்வாக அலுவலர், மேட்ரிமோனி.காம் லிமிடெட்
x. திரு. விஜய் ஆனந்த், நிறுவனர், சென்னை தொடக்க நிலை நிறுவனங்கள் மையம்
xi. திரு. கெவின் ஜார்ஜ், இயக்குநர், IS at Expeditors
xii. திரு. சுரேஷ் சம்பந்தம், மேலாண்மை இயக்குநர் / முதன்மை செயலர் அலுவலர், கிஷ் ஃப்ளோ

இந்த ஆலோசனை குழு தற்போதுள்ள தகவல் தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சூழலை மறுபரிசீலனை செய்வதுடன், சேவை சார்ந்த வளர்ச்சியிலிருந்து உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கான முன்னுதாரண மாற்றங்கள் குறித்தும் பரிசீலனை செய்யும். இக்கூட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, நம்பிக்கை இணையம், மரபணு பொறியியல் போன்றவை குறித்தும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான சூழலை உருவாக்குவதன் தேவை குறித்தும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான தகுதியை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் பாடதிட்டத்தை மேம்படுத்துவதன் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், வன்பொருள் உற்பத்தி துறையில் தமிழகத்தின் தயார் நிலையை மேம்படுத்துதல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் குறித்த விவாதத்தின் போது அனைத்து துறைகள் மற்றும் உற்பத்தி பொருள்கள் உட்பதிக்கப்பட்ட மென்பொருளுடன் (embedded software) தகவல் தொழில்நுட்பம் சார்ந்தே இருப்பது குறித்தும். 2030-ஆம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் டாலர் வளர்ச்சியை எட்டும் விதத்தில் சேவைகள் சார்ந்த துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

அதிக அளவிலான நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஈர்க்கும் வகையிலான ஒரு செயல் திட்டமும், தமிழகத்தின் இரண்டாம் நிலை / மூன்றாம் நிலை நகரங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் குறித்தும் இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. மேலும், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்கான பரிந்துரைகளும் இக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முனைவர் நீரஜ் மிட்டல், இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை, திரு. டேவிதார், இ.ஆ.ப., (ஓய்வு), தமிழ்நாடு மின்ஆளுமை முகமை ஆலோசகர், திரு. விஜயேந்திர பாண்டியன், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT), திரு. S. பாலசந்தர், இ.ஆ.ப., இணை இயக்குநர், தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, திரு. A.K. கமல் கிஷோர், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், TANFINET மற்றும் வருங்கால தகவல் தொழில்நுட்பம், வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Consultative Committee on Prospective Information Technology , Future information technology
× RELATED “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான...