மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

திருவண்ணாமலை: திண்டுக்கல் அருகே பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம், கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி சில தினங்களுக்கு முன்பு மாணவர்கள் திண்டுக்கல் - பழநி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து மாணவி ஒருவர் புகாரில் தாளாளர் ஜோதிமுருகன், விடுதி வார்டன் அர்ச்சனா ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அர்ச்சனாவை கைது செய்த நிலையில், ஜோதிமுருகன் தலைமறைவானார்.

இந்நிலையில் மேலும் இரு மாணவிகள் தாளாளர் ஜோதிமுருகன் மீது தாடிக்கொம்பு காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கல்லூரி தாளாளர் மீது மேலும் 2 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்தனர். அதனையடுத்து தாளாளர் ஜோதிமுருகனை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

ஐந்து தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், தாளாளர் ஜோதி முருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Related Stories:

More