நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட டிச.1 முதல் விருப்பமனு

சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 1.12.2021 காலை 10 மணி முதல் மாவட்ட கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படும் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000, பட்டியல் இனத்தவர், மகளிருக்கு ரூ.500 கட்டணம். சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அன்றைய தினத்தில் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: