×

நெல்லை அரசு மருத்துவமனை சாலையோரம் மயங்கி விழுந்த பெண் நோயாளியை மீட்ட போலீசார்

நெல்லை : நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நெல்லை மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனையில் வழங்கப்பட்ட பெட்ஷீட் மற்றும் கையில் குளுக்கோஸ் ஏற்றியதற்கான அடையாளங்களுடனும் மயங்கி கிடந்தார். இதை சாலையில் சென்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து அந்த வழியாக சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் விசாரித்தபோது, அவர் மேலப்பாளையத்தை சேர்ந்த பாத்திமா என்பதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கவனிக்க உறவினர்கள், ஆதரவாளர்கள் யாருமில்லாத நிலையில் டீ குடிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறி கடை வீதிக்கு வந்தபோது மயக்கம் அடைந்து சாலையில் மயங்கி விழுந்ததும் தெரியவந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை கவனிக்க ஆளில்லாமல் சாலையில் மயங்கிக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Paddy Government Hospital , Nellai: Nellai Government Medical College Hospital Nellai as well as other places including Tenkasi, Thoothukudi, Nagercoil
× RELATED நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...