ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரத்தில் பல்லாங்குழியான சாலையால் வாகனஓட்டிகள் அவதி-சீரமைக்க வலியுறுத்தல்

ஆண்டிமடம் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலை, தெருக்கள் முறையான சாலை வசதி பராமரிப்பு இல்லாததால் சாலைகள் மிகவும் பழுதடைந்து கற்கள் பெயர்ந்து பல்லாங்குழி போல் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது. அழகாபுரம் தெற்கு தெரு, பஸ் ஸ்டாப்ல் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையின் இரண்டு பக்க வாட்டில் இருக்கும் மழைநீர் வடிகால் வாய்க்கால் மழைக் காலத்திற்கு முன்பே உரிய நேரத்தில் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் ரோட்டில் தேங்கி வருகிறது. தெருக்களில் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி உள்ளது.

மேலும் ஆண்டிமடம், அழகாபுரம் ஓலையூர் வழியாக கடலூர் மாவட்டம் ராஜேந்திர பட்டினம் வழியாக அரசு பேருந்து விருத்தாச்சலம் வரை சென்று வருகிறது. அழகா புரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அம்மா மினி மருத்துவமனை ஓலையூர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் பணி செய்யும் அரசு அலுவலர்கள் பைக்கில் தினமும் பயணித்து வருகின்றனர்.

இதனால் குண்டும் குழியுமான சாலையில் பைக் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகள் மீது நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது. தற்போத தொடர் மழை பெய்து வருவதால் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வடிவதற்கு முறையான தூர்வாரும் பணி நடைபெறாததால் மழைநீர் நடுரோட்டில் நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த அழகாபுரம் ஓலையூர் விருத்தாச்சலம் சாலை மிக மோசமான நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து ரோட்டின் பள்ளமான பகுதியை சீரமைத்து தர வேண்டும் என அழகாபுரம் கிராம மக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: