முத்துப்பேட்டை எடையூரில் சேதமடைந்த காலனி வீடுகள்-எம்எல்ஏ மாரிமுத்து பார்வையிட்டு ஆய்வு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த காலனி வீடுகளை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கர்ணகொடை கிராமத்தில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரில் சென்று காலனி வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அந்த வீடுகளில் வசிக்கும் மக்களிடம் வீடுகளில் பாதுகாப்பாக வசிக்க வேண்டும் என கேட்டு கொண்டதோடு, இந்த வீடுகளை விரைவில் அகற்றி புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் எம்எல்ஏ மாரிமுத்து தெரிவித்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் விடுபட்ட அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Related Stories: