×

மேட்டுப்பாளையத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு

மேட்டுப்பாளையம் :  கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் போலீசார் சார்பாக பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து  விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

 மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நேற்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றங்களைத் தடுப்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாணவிகளிடையே மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலமுருகன்
போக்சோ சட்டம் குறித்து பேசிதாவது: பள்ளிகளை சுற்றியும் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளதால்  உங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதனால் தைரியமாக படியுங்கள். சாலை விதிகளைப் பின்பற்றுங்கள், மன அழுத்தம், உங்கள் குடும்பங்களில் பிரச்னைகள் இருந்தால்.

அதற்காக கவலை பட வேண்டாம். நல்ல மனநிலையில்  படிப்பதற்கும் உங்களுக்கு உதவி தேவையென்றால் எந்த நேரத்திலும் உடனே  அழைத்திடுங்கள் என்று காவல்துறை உதவி தொடர்பு எண்ணை மாணவிகளுக்கு தெரிவித்தார் 04222300999, 9498181212, 7708100100 இந்த எண்ணில் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.தைரியமாக இருங்கள். தன்னம்பிக்கையுடன் படியுங்கள். போலீஸ் என்றும் உங்களுக்குத் துணை இருக்கும் என்று பேசினார்.

மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகம்,சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த போலீசாரைபள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்தகுமார், லீலா மகேஸ்வரி, ஆசிரியர்கள் செல்வ பரத், ராஜேந்திரன், லதா, காவலர்கள் சுமித்ரா, ஆமினா உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Tags : Mettupalayam , Mettupalayam: Coimbatore S.P. Mettupalayam DSP Balamurugan on the orders of Selvanagaratnam
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்