×

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவம்!!

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய -சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த `ஹவில்தார் (gunner) பழனியும் ஒருவர்.இந்நிலையில், வீர தீர செயல் புரிந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.

இதில் எதிரிகளை இந்திய எல்லைக்குள் நுழையவிடாமல் துரிதமாகச் செயல்பட்டு உயிர் தியாகம் செய்த 20 பேருக்கு விருது வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத்திடம் இருந்து வீர் சக்ரா விருதை பெற்றுக் கொண்டார். மேலும் சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசு தலைவர் வழங்கினார். ஹவில்தார் பழனி உட்பட 5 பேருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. 15 பேருக்கு சேனா மெடல்கள் வழங்கப்படுகிறது.


Tags : Tamil Nadu ,Palani ,Kalwan valley , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...