திருப்பதி தரிசனத்திற்காக தேதியை மாற்றிக் கொள்ளலாம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருமலை: கனமழையால் ஏழுமலையான் கோவிலுக்கு வர முடியாதவர்கள் டிக்கெட் முன்பதிவை மாற்றிக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு நவ.18 முதல் நவ.30-ம் தேதிக்குள் வர முடியாதவர்கள், வேறு தேதியில் வரலாம். முன்பதிவிற்கான தேதியை 6 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள ஆன்லைனில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி செல்லும் மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன; பக்தர்கள் தயக்கமின்றி திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: