×

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது!!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் பெய்து வருகிறது. இதுவரை  3 காற்றழுத்தங்கள் வங்கக்கடல் பகுதியில் உருவாகி கடந்த 18ம் தேதி வரை பலத்த மழையை கொடுத்தன. 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை மழை குறைந்து வெயில் நிலவியது. இதனால், வெப்பச்சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது.  

தமிழக கடலோரப் பகுதியில் சென்னை முதல் தஞ்சாவூர் வரை நேற்று மழை பெய்தது.
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை, தெற்கு தமிழ்நாடு பகுதிக்கு வரும்.இதன் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி, கேரளாவில் நவம்பர் 25 முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.



Tags : southeastern Bangladesh , வானிலை ஆய்வு மையம்
× RELATED தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி...