திருச்சி எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் காவல்!!

திருச்சி : திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . இரண்டு சிறார்களும் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றம் குழுமத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார் நீதி குழு நீதிபதி அறிவு உத்தரவை அடுத்து,  இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களும் புதுகையை சேர்ந்த 5 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More