கொடநாடு கொலை வழக்கு: தனபால், ரமேஷுக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு

ஊட்டி:   கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது தொடர்பாக கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் காலம் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா, அவர்களை மேலும் 15 நாள் அதாவது டிசம்பர் 6ம் தேதி வரை காவலில் வைக்க   உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீண்டும் கூடலூர் சிறைக்கு போலீசார் கொண்டுச் சென்று அடைத்தனர். தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு நேற்று ஊட்டி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

More