புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் கடலோர காவல்படை வீரர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி மசாஜ் சென்டரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல்படை வீரர் உட்பட மேலும் 2 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு அண்ணா நகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 17 வயது சிறுமி மீட்கப்பட்டார். அவரிடம் 40க்கும் மேற்பட்டோர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளரான சுனிதாவை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அங்கு வாடிக்கையாளர்களாக வந்து சென்ற 40 பேரின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் சுனிதா உள்ளிட்ட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் 35 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மதுராந்தகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் (30), செய்யாறு சீனுவாசன் (50) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் ஜெகத்ரட்சகன் இந்திய கடலோர காவல்படையில் வீரர் என்பதும், சீனுவாசன் பைனான்ஸ் தொழில் செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: