கொரோனாவுக்கு மூத்த நடிகை பலி

மும்பை: பாலிவுட் மூத்த நடிகை மாதவி கோகேட் (58), கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 1990ல் கோவிந்தா, ஜூஹி சாவ்லா நடித்த ‘ஸ்வார்க்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், மகாராஷ்டிராவை சேர்ந்த மாதவி கோகேட். தொடர்ந்து இந்தி மற்றும் மராத்தி படங்களிலும், டி.வி தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

Related Stories:

More