×

பதன்கோட் ராணுவ முகாம் அருகே குண்டு வீச்சு

பதன்கோட்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் தீராப்புல் பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. முகாமின் நுழைவு வாயில் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கையெறி குண்டை வீசி  சென்றனர். இதில் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பதன்கோட் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், ‘கையெறி குண்டு வீசப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

சம்பவ இடத்தில் இருந்து கையெறி குண்டின் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.  இந்த சம்பவத்துக்கு பின், மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு துணை முதல்வர் சுகிந்தர் சிங் ரந்தாவா இன்று அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : Pathankot , Pathankot, Army camp, bombing
× RELATED தீவிரவாதி ஷாகித் லத்தீப்...