×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தகவல்

திருமலை:  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 18ம் தேதி முதல் டிக்கெட் இருந்தும் கனமழையால் வரமுடியாத  பக்தர்கள் வருகிற 30ம் தேதிக்குள் தரிசிக்க அதே டிக்கெட்டுகள் கொண்டு அனுமதிக்கப்படுவார்கள். அதற்குள் வர முடியாத பக்தர்கள்  டிக்கெட்டுகளை ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் தேதி மாற்றிக் கொள்ள தேவஸ்தான சாப்ட்வேர் அப்ளிகேஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலிபிரி வழித்தடத்தில் நடைபாதை சீர் செய்யப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் உள்ள பக்தர்கள்  திருமலைக்கு இன்று முதல் வரலாம். வாரிமெட்டு பாதையில் 4 கல்வெட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல வசதியில்லை. அவற்றை புனரமைக்க தேவையான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வர தாமதமாகும். எனவே, அதுவரை இந்த பாதை மூடப்படும்.  அன்னதானம், கல்யாண கட்டா, ஏழுமலையான் கோயில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் எந்த பிரச்னையுமில்லை. பக்தர்கள் தயக்கமின்றி ஏழுமலையானை தரிசிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tirupati Seven Hills ,Alibri walkway , Tirupati, sidewalk, permission
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...