பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி

தாக்கா: வங்கதேச அணியுடனான 3வது டி20ல், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது (நயிம் 47, ஷமிம் 22, அபிப் 20). அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து வென்றது (ரிஸ்வான் 40, பாபர் 19, ஹைதர் அலி 45). ஹாட்ரிக் வெற்றி பெற்ற பாக். 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஹைதர் அலி ஆட்ட நாயகன் விருதும், ரிஸ்வான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories:

More