நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திமுகவினர் போட்டியிட விண்ணப்பம் வினியோகம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் நாளை விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுராந்தகம் நகராட்சி, உத்திரமேரூர், வாலாஜாபாத், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் நாளை (நவ.24) காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் (மாமன்ற உறுப்பினர் 10 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் 5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் 2,500) உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More