40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை: கலெக்டர் அலுவலகத்தில் மனு

செங்கல்பட்டு:  கரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  விரால்பாக்கம் கிராம மக்கள், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா, கரும்பாக்க்கம் ஊராட்சி  விரால்பாக்கம் கிராம மக்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது. வெங்கூர் கூட்ரோடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 100 குடும்பங்கள் வீடுகட்டி  வசிக்கின்றனர்.

குடியிருக்கும் இடத்துக்கு  பீம் ரசீது, வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை பெற்று பல ஆண்டுகளாக மின் கட்டணமும் செலுத்தி வருகிறோம். சாலை, குடிநீர் குழாய், தெரு மின்விளக்கு என அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பஞ்சாயத்து மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால், அரசு மூலம் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் இல்லாமல், குடிசை வீடுகளில் வசிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல குடும்பங்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. இதில், விடுபட்டுள்ள தங்களுக்கும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பபட்டுள்ளது.

Related Stories:

More