×

பெட்ரோல், டீசல் விலையை குறைக்ககோரி பாஜவினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜ இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் அபிலாஸ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ரஞ்சித், வெங்கட், குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி தலைவர் சிரஞ்சீவி வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் ஆர்த்திக் மோகன்தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹூம், அரசு தொடர்புத்துறை மாநில  தலைவர் பாஸ்கரன் மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத், மாவட்ட நிர்வாகிகள் அஸ்வின், மூர்த்தி, பன்னீர்செல்வம், ஜெய்கணேஷ், நகர் தலைவர் சதீஷ்குமார், மகளிர் அணி நிர்வாகி ஜமீலா பாஸ்கரன் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Tags : BJP , Petrol, Diesel, Price, Bjp , Demonstration
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...