எஸ்எஸ்ஐயை கொன்றவர்களை உடனே தண்டிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித்தொகையை தமிழக அரசு அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கின்றது. குற்றத்தொடர்பு உடைய 4 பேரை காவல்துறையினர் பிடித்து இருக்கிறார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: