ஒன்றிய அரசை கண்டித்து நடைபயணம் சென்ற விஜய்வசந்த் எம்.பி கைது

நாகர்கோவில்: கருங்கலில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபயணம் செல்ல முயன்ற விஜய்வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளை, மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வடசேரி காந்தி பார்க் அருகே நேற்று காலை நடந்த பிரசார நடைபயணத்தை விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார். அவரும் நடைபயணத்தில் கலந்து கொண்டார். இதேபோல் கருங்கல் நகர காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் நடைபயணம் புறப்பட்டனர். அனுமதி இல்லாததால் அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நடைபயணம் செல்ல முயன்றனர். போலீசார் தடுத்ததால் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விஜய்வசந்த் எம்.பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: