×

தொற்று பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்; மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும்  கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.  

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Kamal Haasan , Kamal Haasan, who was admitted with infection, is in good health; Hospital Management Report
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...