×

நோரோ தொற்றைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: நோரோ தொற்றைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை; மக்கள் பீதியடைய வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால், கவனக்குறைவாக இருக்கக்கூடாது, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலையோர கடைகளில் எண்ணெய்களில் பொறித்த உணவுகள், சட்னி, கொதிக்க வைக்காத நீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளாதீர்.
வெளியூர், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Noro ,People's Welfare ,Radhakrishnan , There is no need to fear Noro infection; People's Welfare Secretary Radhakrishnan
× RELATED திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு