பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும்; ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் குறைத்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளது.

தமிழக அரசும் குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் தனது அறிக்கையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரிகள், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ஒன்றிய அரசின் வரி அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என்று கூறியிருக்கிறார்.

ஒன்றிய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கிற நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருப்பதால் தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More