மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா; அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் பாதிப்பு உறுதி.!

சென்னை: அமெரிக்கப் பயணம் முடிந்து சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான இருமல் இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது.

பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: