சென்னையில் இன்று மழை, வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது மத்திய குழு

சென்னை: ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலாளர் திரு. ராஜீவ் சர்மா அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளை ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலாளர் திரு. ராஜீவ் சர்மா அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று (22.11.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கடந்த ஒரு வார காலமாக நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசின் சார்பில் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட 7 நபர்கள் கொண்ட மத்திய குழு அறிவிக்கப்பட்டது.  

ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலாளர் திரு.ராஜீவ் சர்மா அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர் 21.11.2021 அன்று ரிப்பன் கட்டட வளாகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டு, உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஒன்றிய அரசின் உள்துறை இணைச் செயலாளர் திரு. ராஜீவ் சர்மா அவர்கள் தலைமையில் 4 நபர்கள் கொண்ட மத்திய குழுவினர் இன்று (22.11.2021) பெருநகர சென்னை மாநகராட்சி. திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வீராசெட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளிலும், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட அழகப்பா சாலையிலும் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, மத்திய குழு உறுப்பினர்கள் திரு. விஜய் ராஜ்மோகன் அவர்கள், திரு. ரனன்ஜெய் சிங் அவர்கள், திரு. எம். வி. என். வரப்பிரசாத் அவர்கள், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் திரு. கே. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) அவர்கள், திரு.மா.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு.பி.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், திரு.வி.க.நகர் மண்டல கண்காணிப்பு அலுவலர் திரு.எம்.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு.முரளிதரன்  மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More