எட்டயபுரம் பஸ் நிலையத்தை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள்

எட்டயபுரம்:   இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 வீரர்கள் தூத்துக்குடி ஜவான்ஸ் பசுமை தூய்மை என்னும் அமைப்பை ஏற்படுத்தி சமூக பணியாற்றி வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வரும் வீரர்கள் ஒன்று சேர்ந்து அரசு மருத்துவமனை. பள்ளி, கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை சுத்தம் செய்து வர்ணம் தீட்டிகொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தற்போது விடுமுறையில் வந்திருக்கும் வீரர்கள் நேற்று எட்டயபுரம் பஸ் நிலையத்தை முழுவதும் சுத்தம் செய்து வர்ணம் தீட்டினர். தேசத்தின் எல்லையில் உயிரை பணயம் வைத்து பணிபுரியும் வீரர்கள் விடுமுறை நாட்களில் ஆர்வமுடன் சமூகப்பணி ஆற்றுவதை பார்த்து பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: