×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார்!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். எனவே, தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியாக உள்ள துரைசாமி, சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி முனிஸ்வரர்நாத் பண்டாரி சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் கவர்னர் ரவி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பதவியேற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும், மூத்த வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.


Tags : Munyeswarnath Bandari ,Chief Justice ,High ,Court ,Chennai , னீஸ்வர்நாத் பண்டாரி
× RELATED தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும்...