×

40 சிஆர்பிஎப் வீரர்களை பலி கொண்ட புல்வாமா தீவிரவாத தாக்குதல்... பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் அமேசான் மூலம் வாங்கப்பட்டது!!

ஸ்ரீநகர் : வெடிகுண்டு மூலப்பொருட்களை அமேசான் உள்ளிட்ட இணைய வர்த்தக தளங்களில் விற்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்ஐஏ நடத்தி வரும் விசாரணையில் வெடிப் பொருட்கள் தயாரிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசிரின், பேட்டரிகள் ஆகியவை அமேசானில் வாங்கப்பட்டது தெரியவந்தது.

கடைகளில் வைத்து விற்க முடியாத அல்லது தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆன்லைன் தளங்களில் மிக எளிமையாக கிடைப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே அமேசான் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆன்லைன் விற்பனை தளங்கள் பொருட்களை விற்பனை செய்ய முறையான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Pulwama ,Amazon , வெடிகுண்டு
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...