சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய அமைச்சரின் கார் மீது முட்டை வீச்சு!!

புபனேஸ்வர் : ஒடிசாவில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து ஒன்றிய அமைச்சரின் கார் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஒன்றிய அமைச்சர் பிஸ்வேஸ்வர் ஒடிசா மாநிலம் கேந்திபூராவுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்தின் மாணவர்கள் அமைப்பினர் பிஸ்வேஸ்வர் காரில் மீது முட்டைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் சார்பில் 3 நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், ஒன்றிய அமைச்சரின் கார் மீது முட்டை வீசப்பட்டுள்ளது. கடந்த வாரம் உத்தரகாண்ட்  மாநிலம்  நவுகானுக்கு ஒன்றிய அமைச்சர் பிஸ்வேஸ்வர் சென்று இருந்த போதும் எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் முட்டை வீசியும் கருப்பு கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே பாணியில் ஒடிசாவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: