முதல்வர் உறுதி மீனவர்கள் இடர் களையப்படும்

சென்னை: மீனவர்களின் இடர்களை களைய சிறப்பு கவனம் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக மீன்வள நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மீனவர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு. மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இடர்களைக் களைய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக மீன்வள நாளில் உறுதியளிக்கிறேன்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More