இனி தட்கல் கட்டணம் கிடையாது பழைய எண், வழக்கமான கட்டணத்தில் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பண்டிகை கால ரயில்களில் இனி தக்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாது. வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். இன்னும் 6 நாட்களிலேயே அனைத்து ரயில் எண்களும் வழக்கமான எண்களாக மாற்றப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்:  இந்திய ரயில்வே வாரியம், கடந்த 12ம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில் எண்களிலும் இயக்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 86 விடுமுறைகால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம், தட்கல் கட்டணத்தில் இருந்து வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது.

இதைப்போன்று மற்ற ரயில்வே மண்டலங்களிலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டதால் அதில் எந்தவித கட்டண குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்தியன் ரயில்வேயின் 5 மண்டலத்தில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில், ரயில் எண்கள், மீண்டும் வழக்கமான எண்களாக மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்ததால் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் தற்போது அந்த பணி நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட ஒரு நாள் முன்பு அதாவது கடந்த 20ம் தேதியே முடிவடைந்து 6 நாட்களிலேயே தெற்கு ரயில்வேயில் அனைத்து ரயில் எண்களும், வழக்கான எண்களாக மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: