கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:   பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது. தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் தாயார் ஜெயந்தி வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க இரவு தன்னுடைய உறவினர்களான சுந்தரம், தமிழரசன், கார்த்தி, லிச்சா, ஜெயலட்சுமி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார்.

மேலும் கார்த்திக்கை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். ஆய்வாளரை  உடனடியாக கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக் கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More