குறைந்தபட்சம் உங்கள் எம்பி சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்: மோடிக்கு காங்கிரஸ் அறிவுரை

புதுடெல்லி:  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: அருணாச்சல பிரதேசத்தில் 6 முதல் 7 கிமீ ஊடுருவி சீனா 2வது கிராமத்தை கட்டமைத்துள்ளது. இந்த விஷயத்தில் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? அவரது மவுனம் கண்டனத்துக்குரியது.  இதே போல் இருந்தால், அருணாச்சல பிரதேசம் அடுத்த டோக்லாம் ஆகிவிடும் என கடந்த 2019ல் அருணாச்சலின் பாஜ எம்பி தபிர் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளைதான் நிராகரிக்கிறீர்கள், குறைந்தபட்சம் சொந்த கட்சி எம்பி சொல்வதையாவது பாஜ காது கொடுத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: