மாமல்லபுரத்தில் நரிக்குறவ பெண்ணிடம் பாசி மணி வாங்கிய நாடாளுமன்ற நிலைக்குழுவினர்

சென்னை: மாமல்லபுரத்தில் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழுவினர் வந்து புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். அப்போது, நரிக்குறவப் பெண்ணிடம் பாசி மணியை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.  டெல்லியில் இருந்து நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் 18 பேர் நேற்று மாலை 6 மணிக்கு மாமல்லபுரம் வந்தனர். பின்னர், அவர்கள் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். வெண்ணெய் உருண்டை பாறை முன்பு நின்று குழுப் புகைப்படம் எடுத்தனர். இங்குள்ள மூத்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் மாமல்லபுரத்தின் சிறப்பு குறித்து விளக்கிக் கூறினார். இதையடுத்து, வெண்ணெய் உருண்டை பாறை வெளியே காரில் ஏற வந்த நிலைக் குழுவினர் அங்கு பாசிமணி விற்றுக் கொண்டிருந்த நரிக்குறவ பெண்ணை அழைத்து ஆர்வமுடன் பாசிமணி வாங்கி சென்றனர்.

Related Stories:

More