வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பெய்த மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்தியக் குழுவினர் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் சேதங்களை முழுமையாக, சரியாக ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த முழு அறிக்கை ஒன்றை மத்தியக் குழுவினரிடம் அளிக்க வேண்டும். மத்தியக் குழுவினரும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்ப ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அதன் மூலம் மத்திய அரசும் தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: