×

22ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் வங்கதேச விடுதலை பொன்விழா: ேக.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு மக்களின் பேராதரவு பெற்ற ஷேக் முஜிபூர் ரஹ்மானை பிரதமர் பொறுப்பில் அமர்த்தியவர் இந்திரா காந்தி. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து அரவணைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. இத்தகைய சாதனைகளைப் புரிந்து வங்கதேசம் விடுதலையைப் பெற்ற 50வது ஆண்டு பொன்விழாவை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக நாடு முழுவதும் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வங்கதேச விடுதலையின் 50வது ஆண்டு பொன்விழா வருகிற நவம்பர் 22ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நடைபெறுகிற விழாவில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளர் கேப்டன் பிரவீன் தவார் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள் பலர் பங்கேற்கின்றனர்.



Tags : Golden Jubilee ,Bangladesh Liberation ,Sathyamoorthy Bhavan ,KS Alagiri , Sathyamoorthy Bhavan, Bangladesh Liberation, Golden Jubilee, KS Alagiri
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...