மதுரையில் மெட்ரோ ரயில் ஆய்வுப்பணிக்கு டெண்டர்

மதுரை: சென்னையை போல, மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை அமல்படுத்த தொடர் கோரிக்கை இருந்தது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் துவங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. திட்ட பகுதிகள், பயணிகள், அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்காலத் தேவை மற்றும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து 4 மாதத்தில் திட்ட அறிக்கையை வழங்க வேண்டுமென டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: