×

திருமணத்துக்கு மறுத்த வாலிபர் மீது ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்: பேஸ்புக் மூலம் மலர்ந்த மோசடி காதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் பூஜப்புரா பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (29). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியை சேர்ந்த ஷீபாவுடன் (33) பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க தொடங்கினர். ஷீபாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதை மறைத்து அருண் குமாருடன் பழகி வந்தார். சில வாரங்களுக்கு முன், ஷீபாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள  விவரம் அருண் குமாருக்கு தெரியவந்தது. இதனால், பேசுவதை  தவிர்த்தார். ஆனால், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றுஷீபாமிரட்டினார். இதனால், அருண் குமார் வேறு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது, ஷீபாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்பு அருண் குமாரை தொடர்பு கொண்ட ஷீபா, தனக்கு ரூ.2 லட்சம் தந்தால் ஒதுங்கி கொள்வதாக மிரட்டியுள்ளார். வேறு வழியின்றி, கடந்த 16ம் தேதி பணத்துடன் வருவதாக அருண் குமார் கூறினார். தொடுபுழா அருகே அடிமாலியில் உள்ள சர்ச் அருகில் ஷீபாவை அருண் குமார் சந்தித்து பேசினார். அப்போது, திடீரென ஷீபா தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அருண் குமார் முகத்தில் வீசினார்.  ஷீபாவின் முகத்திலும் ஆசிட் பட்டது. இதனால், ஷீபா அங்கிருந்து தப்பி விட்டார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி.யில் பதிவாகி இருக்கிறது. ஆசிட் பட்டு வலியால் துடிதுடித்த அருண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஒரு கண்ணில் பார்வை  பறிபோய் விட்டது.

* கணவரின் வீட்டில் தஞ்சம்
ஆசிட் வீச்சுக்குப் பிறகு ஷீபா, தனது கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சமைக்கும்போது சுடு தண்ணீர் பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி சமாளித்துள்ளார். இந்த நிலையில், ஷீபா அவரது கணவர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிந்ததும் அங்கு சென்று கைது செய்தனர்.


Tags : Madre de dos hijos arroja ácido a un adolescente soltero: el romance fraudulento floreció a través de Facebook
× RELATED ‘ஏஐ’ தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை: பில்கேட்ஸ் – மோடி சந்திப்பு