×

அமைச்சரவை விரிவாக்கம் ராஜஸ்தானில் 15 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: பைலட் கோஷ்டியில் 5 பேருக்கு பதவி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், கெலாட்டுடன் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக கடந்தாண்டு திடீரென போர்க்கொடி உயர்த்தினார். தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் கட்சியை விட்டு வௌியேறினார். கட்சித் தலைவர் சோனியாவின் சமரசத்துக்கு பிறகு, கட்சியில் தொடர்ந்தார்.இவருடைய ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக பல மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, கெலாட் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், புதிதாக 15 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் 5 பேர் பைலட் ஆதரவாளர்கள். ஆனால், பைலட் எந்த பதவியையும் ஏற்கவில்லை.  இந்த விரிவாக்கத்தின் மூலம்,  இம்மாநில காங்கிரசில் நிலவி வந்த உட்கட்சி பூசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 2023ல் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு, இலாகா ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்றும்,  பதவிகள் கிடைக்காத எம்எல்ஏ.க்களுக்கு வேறு பதவிகள் வழங்கப்படும் என்றும் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு முதல்வர் கெலாட் தெரிவித்தார்.

* மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 200. இதில், காங்கிரசுக்கு 108 பேர் உள்ளனர்.
* இம்மாநில அமைச்சரவையில் அதிகப்பட்சமாக முதல்வர் உட்பட 30 அமைச்சர்கள் இடம் பெறலாம்.
* நேற்று நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம், கெலாட் அமைச்சரவையின் மொத்த பலம் 30 ஆக உயர்ந்துள்ளது.
* இவர்களில் 19 பேர் கேபினட் அமைச்சர்கள். 10 பேர் இணையமைச்சர்கள்.
* அமைச்சரவையில் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 2 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


Tags : Cabinet ,Rajasthan , Ampliación del gabinete 15 nuevos ministros en Rajasthan: 5 en la facción piloto
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...