புரட்சி பாரதம் கட்சி மறியல்

திருவள்ளூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள காமராஜர் புறத்தில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கேவிகுப்பம் எம்எல்ஏவும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை எம்.ஜெகன்மூர்த்தி நேரில் ஆய்வு செய்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் வராததால் பொதுமக்களுடன் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து எம்எல்ஏ பூவை எம்.ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து திருவள்ளூரில் மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, வழக்கறிஞர் பிரிவு மாநில பொது செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சி.பி.குமார், நயப்பாக்கம் டி.மோகன், டி.கே.சீனிவாசன், பி.தாமஸ், எஸ்.பார்த்திபன், எம்.எழில்வண்ணன், புங்கத்தூர் டி.தேவா, செஞ்சி ஜவகர் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: