திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விண்ணப்பங்கள் விநியோகம்

ஆவடி: நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராமில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகள், திருமழிசை பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

இந்த விண்ணப்ப படிவங்களை போட்டி போட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சியில், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், பதாகை வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், வக்கீல் கு.சேகர், எல்லாபுரம் எம்.குமார்,  ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் மற்றும் ஆவடி மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் மற்றும் நகர, பேரூர், வார்டு செயலாளர்கள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  

Related Stories:

More