திருப்போரூர் ஒன்றியத்தில் மத்தியக்குழு இன்று ஆய்வு

திருப்போரூர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரண்டு மத்திய குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர். இன்று 22ம் தேதி திங்கட்கிழமை காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஒரு குழுவினர் பார்வையிடுகின்றனர். ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா, வேளாண் துறை இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலர் ரனஞ்செய் சிங், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர் வரப்பிரசாத் ஆகிய நால்வர் குழு இன்று காலை சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தாழம்பூர், படூர் ஆகிய ஊராட்சிகளில் பருவ மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிடுகின்றனர். இவர்களுடன் தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் உடன் செல்கின்றனர்.

Related Stories:

More