மாமல்லபுரம் பெருமாள் கோயில் திருப்பணி துவக்கம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ தலசயன பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாகும். இந்தக் கோயிலில் 23 ஆண்டுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில், கோயிலில் கடந்த இரண்டு நாட்கள் யாகம் வளர்த்து நேற்று பாலாலய உற்சவம் செய்யப்பட்டு, திருப்பணி துவங்கியது.

Related Stories: