உத்திரமேரூர் தொகுதியில் 2 மின்மாற்றிகள் இயக்கம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 2 மின்மாற்றிகளை உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை நடேசன் நகரில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய மின்மாற்றி அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். இதனையடுத்து அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை க.சுந்தர் எம்எல்ஏ நேற்று  திறந்து வைத்தார். இதேபோன்று ஓரிக்கை அப்பாவு நகரில் தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றியையும் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய காஞ்சிபுரம் வடக்கு செயற்பொறியாளர் சரவணத்தங்கம், இணை செயற்பொறியாளர் இளையராஜா, காஞ்சிபுரம் உதவிப் பொறியாளர் சிவானந்தம், திமுக நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் சாலவாக்கம் குமார், நிர்வாகி கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: