11 நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை: கரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 நகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட உத்தரவு: கரூர் நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி, தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் அர்பன் ஸ்டடீஸ் கோவை இணை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். பல்லவபுரம் நகராட்சி ஆணையர் காந்திராஜ், ஊட்டிக்கு மாற்றப்படுகிறார். காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் எஸ்.லட்சுமி மறைமலைநகருக்கும், மறைமலைநகர் நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராம், கோவில்பட்டி நகராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர்.சந்திரா, ராமநாதபுரம் நகராட்சி ஆணையராகவும், திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் எகராஜ், ராணிப்பேட்டை நகராட்சிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சத்யநாதன், உடுமலைப்பேட்டைக்கும், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா திருப்பத்தூருக்கும், எடப்பாடி நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு குடியாத்தம் நகராட்சிக்கும், திருத்தங்கல் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கடையநல்லூர் நகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காங்கேயம் நகராட்சி ஆணையர் முத்துகுமார் திருத்துரைப்பூண்டி நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், மதுரை நகராட்சி வட்டார இயக்குனர் கே.ராஜன், திருப்பூர் நகராட்சி வட்டார இயக்குனராகவும், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி சசிகலா, செங்கல்பட்டு நகராட்சி வட்டார இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் அர்பன் ஸ்டடீஸ் கோவை இணை இயக்குனர் விஸ்வநாதன், கடலூர் நகராட்சி ஆணையராகவும், ஊட்டி நகராட்சி ஆணையர் சரஸ்வதி, ஆவடி நகராட்சி ஆணையராகவும், கும்பகோணம் நகராட்சி ஆணையர் நவேந்திரன், மகளிர் மேம்பாட்டு கழகம்-தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் இணை இயக்குனராகவும், கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், 12 இரண்டாம் தர நகராட்சி ஆணையர்களுக்கு முதல்தர ஆணையர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் பல்வேறு பணிநிலைகளில் இருந்த 20 பேருக்கு இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More