×

மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிவேக விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிவேக விரைவு ரயில்கள் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  ஜோத்பூர்-சென்னை இடையே நாளை  11.55 மணிக்கு இயக்கப்படும் (22664) அதிவிரைவு ரயில் ரத்து  செய்யப்படுகிறது. அதைப்போன்று நாகர்கோவில்-சாலிமார் இடையே இன்று பிற்பகல்  2.45 மணிக்கு இயக்கப்படும் (12659) வாராந்திர அதிவேக விரைவு ரயில், சென்னை-  விஜயவாடா இடையே இன்று பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்படும் (12712)  பினாங்கினி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- ஐதராபாத் இடையே இன்று மாலை 4.45  மணிக்கு இயக்கப்படும் (12603) டெக்கான் எக்ஸ்பிரஸ், சென்னை-  ஜெய்ப்பூர் இடையே இன்று மாலை 5.40 மணிக்கு இயக்கப்படும் (12967) அதிவேக விரைவு  ரயில்,

சென்ன- டெல்லி இடையே இன்று 6.50 மணிக்கு இயக்கப்படும் (12615) அதிவேக விரைவு  ரயில், தாம்பரம்- ஐதராபாத் இடையே இன்று மாலை 5 மணிக்கு  இயக்கப்படும் (12759) சார்மினா அதிவேக விரைவு, ரயில் செங்கல்பட்டு- காக்கிநாடா   இடையே இன்று மாலை 4 மணிக்கு இயக்கப்படும் (17643) போர்ட் அதிவேக விரைவு ரயில்,  திருவனந்தபுரம்- டெல்லி கேரளா இடையே இன்று பிற்பகல் 12.20 மணிக்கு  இயக்கப்படும் (12625) அதிவேக விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

  மேலும் செங்கல்பட்டு-கச்சிகுடா இடையே நேற்று பிற்பகல் 3.35 மணிக்கு இயக்கப்படும் (17651) அதிவேக விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. அதைப்போன்று சென்னை- நிஜாமுதீன் இடையே காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் (12269) ட்ராண்டோ அதிவேக விரைவு ரயில், சென்னை- ஹவுரா இடையே காலை 7 மணிக்கு இயக்கப்படும் (12842) கோரமண்டல் அதிவேக விரைவு ரயில், சென்னை- விஜயவாடா இடையே காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் (12077) சதாப்தி அதிவேக விரைவு ரயில், சென்னை- அகமதாபாத் இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் (12656) நவாஜூவன் அதிவேக விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Southern ,Railway , Rain flood damage, high speed trains, Southern Railway
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...